Search

Saved articles

You have not yet added any article to your bookmarks!

Browse articles

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

நாகை - இலங்கை கப்பல் பயணக் கட்டணம் குறைப்பு

நாகை - இலங்கை கப்பல் பயணக் கட்டணம் குறைப்பு
கப்பல் கட்டணம் குறைக்கப்பட்ட அறிவிப்பை வெளியிட்டார் தலைமை வணிக அதிகாரி பி.எஸ்.சிவராம்.

கப்பல் சேவை தொடங்கி இரண்டரை ஆண்டுகளில், இதுவரை 55,000-க்கும் மேற்பட்ட பயணிகள் பயணம் செய்துள்ளதாக அந்நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பகிரவும் WhatsApp Facebook

நாகப்பட்டினம்– இலங்கை இடையே பயணிகள் கப்பல் இயக்கப்பட்டு வருகிறது. இதனை சுபம் கப்பல் நிறுவனம் இயக்கி வருகிறது. இதன் மூலமாக தமிழகம்-இலங்கை இடையே வணிகத்துக்காகவும் , சுற்றுலாவுக்காகவும் ஏராளமான பயணிகள் சென்று வருகின்றனர்.

இந்நிலையில் சுபம் கப்பல் சேவை தொடங்கி இரண்டரை ஆண்டுகளில், இதுவரை 55,000-க்கும் மேற்பட்ட பயணிகள் பயணம் செய்துள்ளதாக அந்நிறுவனத்தின் தலைமை வணிக அதிகாரி பி.எஸ்.சிவராம் தெரிவித்துள்ளார். "இக்கப்பல் சேவை மூலம் இரு நாடுகளுக்கு இடையிலான வணிக உறவுகள் மற்றும் சுற்றுலாத்துறை மேம்பட்டு வருகிறது.

விழாக்கால சிறப்புச் சலுகையாக கப்பல் பயணக் கட்டணம் ரூ.6000 லிருந்து ரூ.5,500 ஆக குறைக்கப்பட்டுள்ளது " என்று அவர் தெரிவித்தார்.

மேலும், பயணிகள் எடுத்துச் செல்ல அனுமதிக்கப்பட்ட உடைமைகள் அளவும் 10 கிலோவிலிருந்து 30 கிலோவாக உயர்த்தப்பட்டுள்ளது. அதன்படி, 30 கிலோ செக்-இன் லக்கேஜ் மற்றும் 7 கிலோ கைப்பையில் எடுத்துச் செல்லும் பொருட்களை இலவசமாகக் கொண்டு செல்லலாம் எனவும் அவர் தெரிவித்தார்.

புயல், மழை, கடல் சீற்றம் உள்ளிட்ட வானிலை எச்சரிக்கை விடுக்கப்படும் நாட்களைத் தவிர, பயணிகளுக்கு ஏதுவான அனைத்து நாட்களிலும் கப்பல் சேவை தொடர்ந்து நடைபெறும் என்றும் பி.எஸ்.சிவராம் கூறினார்.

முந்தைய செய்தி
ரூ.1,093 கோடி மதிப்பிலான திட்டங்கள் தொடக்கம் - 2,850 பேருக்கு வேலைவாய்ப்பு
அடுத்த செய்தி
மாணிக்கம் தாகூருக்கு எதிரான தேர்தல் வழக்கு வாபஸ்

தொடர்புடைய செய்திகள்